Monday, August 2, 2010

சொந்த ஊர்!!!!!

வயல்வெளி பார்த்து
வறட்டி தட்டி
ஓணாண் பிடித்து
ஓடையில் குளித்து
எதிர்வீட்டில் விளையாடி
எப்படியோ படித்த நான்
ஏறிவந்தேன் நகரத்துக்கு !

சிறு அறையில் குறுகிப் படுத்து
சில மாதம் போர்தொடுத்து
வாங்கிவிட்ட வேலையோடு
வாழுகிறேன் கணிப்பொறியோடு !

சிறிதாய்த் தூங்கி
கனவு தொலைத்து
காலை உணவு மறந்து
நெரிசலில் சிக்கி
கடமை அழைக்க
காற்றோடு செல்கிறேன்
காசு பார்க்க !

மனசு தொட்டு
வாழும் வாழ்க்கை
மாறிப் போகுமோ ?

மௌசு தொட்டு
வாழும் வாழ்க்கை
பழகிப் போகுமோ ?

வால்பேப்பர் மாற்றியே
வாழ்க்கை
தொலைந்து போகுமோ ?

சொந்த பந்த
உறவுகளெல்லாம்
ஷிப் பைலாய்
சுருங்கிப் போகுமோ?

வாழ்க்கை
தொலைந்து போகுமோ
மொத்தமும்!
புரியாது
புலம்புகிறேன்
நித்தமும்!

தாய் மடியில் தலைவைத்து
நிலவு முகம் நான் ரசித்து
கதைகள் பேசி
கவலைகள் மறந்த காலம்
இனிதான் வருமா ?

இதயம் நனைத்த
இந்த வாழ்வு
இளைய தலைமுறைக்காவது
இனி கிடைக்குமா ?

சொந்த மண்ணில்
சொந்தங்களோடு
சோறு திண்பவன்
யாரடா ?
இருந்தால் அவனே
சொர்க்கம் கண்டவனடா!

5 comments:

NarayanaMoorthy K said...

“நீ ஆசிர்வதிக்கப்பட்டவள்” என்றேன்
“நீ அதிர்ஷ்டம் கண்டவன்” என்றாள்
“உன்னை வாசிக்கும் மாணவன் நான்”
“உன்னில் வசிக்கும் வாசம் நான்”

கோலமிடுகிறாள்,காலை வேளையில்
சிக்கும் புள்ளிகளென நானும் ; எனை
சிறை செய்யும் விரலென நீயும்.
கேட்பேனா விடுதலை இனிநாளும்?

உடல் பசிக்கும்;உயிர் ருசிக்கும்;
பட்டினியென்பது பார்,இரண்டிற்கும்
கம்மங்கூழோ ; காமம்ஊழோ?
பறிமாறுகிறாள்;பசிதீர்ப்பவள்

பறிக்க நீ மறந்தமலர்கள் அழும் ; கண்டு
சிரிக்க நாணி கீழ் உதிர்ந்துவிழும்- பனி
தெறிக்க ஒளிரும் வண்ணம் - உன்இதழ்
விரிக்க வண்டு தேனென எண்ணம்

‘மலரினும் மெல்லிது காமம்’ என்
வள்ளுவன் இடுகிறான் தூபம்
கள்ளென காணுது கண்களும்;கண்டு
கொள்ளென கொல்லுது என் தாபம்

அள்ளஅள்ளப்பருகுது தாகம் - பின்னு
தள்ளத்தள்ள மருகுது தாபம் - கூடி
மெல்லமெல்ல சிலிர்க்குது தேகம்
சொல்லச்சொல்ல சுவைப்பது மோகம்

கடவுள் ஒன்று இருந்தால் புத்திசாலி;
வரத்திற்கும் சாபத்திற்கும் பொழுதும்
வித்தியாசம் பார்ப்பதில்லை; கேட்டு
வாங்குகிறவன் வகைப்படுத்துகிறான்

எனைப்பார்த்துக்கொண்டே ஒளிந்தாள்
நான் சிரித்துக்கொண்டே கிடந்தேன்
எனைப்பார்த்துக்கொண்டே ஒளிர்ந்தாள்
நான் கிடந்துகொண்டே சிரித்தேன்

மரணம் சிலரை ஆசிர்வதிக்கிறது
வாழ்வு பலரை சபிக்கிறது;
நீ ஆசிர்வதிக்கப்பட்டவள்!!!
நான் சபிக்கப்பட்டவன்....

NarayanaMoorthy K said...

எனக்கு எதாவது காரியம் ஆகணும்னா “உனக்கு 16 புள்ள குட்டிங்க பொறக்கும், எனக்கு அதை செஞ்சி தாயேன் ப்ளீஸ்” அப்படின்னு காரியம் ஆக வேண்டியவங்க கிட்ட சொல்றது வழக்கம்.

அப்படித் தான் ஒரு நாள்

நான்: “சுந்தரி அந்த டெஸ்டிங் பண்ணித் தாயேன், உனக்கு 16 குள்ள(??!!) குட்டிங்க பொறக்கும்”

அவள்: !#$%^&*()

நான்: (பயத்துடன்)

அவள்: குள்ள குட்டிங்கள வச்சிக்கிட்டு குடும்பத்தோட சர்க்கஸ்’ல கோமாளி வேஷம் போட சொல்றியா?

நான்: (வாய் தவறி வந்த வார்த்தைக்கு தேவையா இதெல்லாம்)

Narayana Moorthy K said...

“ஹாய்’டா!!!.. செல்லம்…”

“Hai!!!.. My Sweet Cutie Pie!!!…”

” என்னாது இது???… ”

“செல்லமா கூப்டேன்டா…”

” அதுக்கு தமிழ்’ல கூப்டலாம்’ல‌…ஒரு மண்ணும் புரியல.”

“அத எப்டி’டா… தமிழ்’ல சொல்றது?… ”

“குட்டிப்பையா’னு கூப்டு…”

“சரிடா இடியட்!!!…”

“மறுபடியும் பாரு…. ”

“இடியட்டுக்கு தமிழ்’ல என்னடா சொல்றது?…ஏன்டா படுத்துற??”

“எடுவட்ட பயலே’னு கூப்டு… முட்டா பயலே னு கூப்பிடு .”

“சரிடா.. பொறுக்கி, தறுதலை, முண்டம்…சோமாரி கஸ்மாலம், முடிச்சவிக்கி...”

“ச்சே!!!… எனக்கு நானே சூனியம் வச்சுக்கிட்டேனே….”

“டேய்!!!.. பசிக்குது. வாடா … KFC போவோம்…”

“உனக்கு பன்னு வாங்கி திங்கணும் அவ்ளோதானே. சரி வா….”

ப‌ர்க‌ர் ஆர்ட‌ர் ப‌ண்ணி வாங்கிட்டு வ‌ந்து ஒரு ஓர‌மா ஒக்காந்துட்டோம்…

“நான் கேட்ட‌துக்கு நீ இன்னும் ப‌தில் சொல்ல‌ல‌ டி …”

“என்ன‌ டா கேட்டே??…. ” (ஒரு பன்ன நிம்மதி யா திங்க முடியுதா???)

“நெச‌மாவே.. உன‌க்கு என்னை புடிச்சுருக்கா???…”

“எத்த‌னை த‌ட‌வை’டா கேப்பே??”

“இல்லை. என‌க்கு என் மேலேயே ந‌ம்பிக்கை இல்லை அதான்…”

“உன‌க்கு என்னை புடிச்சுருக்கா??…”

” புடிச்சுருக்கா’வா???…. இப்போ பாரு… சைடு’ல‌ அந்த‌ ஜீன்ஸ் போட்ட‌ ஃபிக‌ரு சூப்பரா இருக்கா… ஆனா, அவ‌ள‌ நான் பாக்க‌வே இல்லை… உன் பின்னாடி, சும்மா கும்மு’னு ஒருத்தி உக்காந்து இருக்கா. அவ‌ள‌ பாக்க‌னும்னு கூட‌, என‌க்குத் தோண‌ல‌…இதுல‌ இருந்து என்ன‌ தெரியுது???”

“நீ திருந்துற‌ மாதிரி, ஐடியால‌ இல்லை’னு தெரியுது….”

“ஹேய் அப்டி சொல்லாதே… உன் மேலே என் உசுர‌யே வ‌ச்சுருக்கேன்…அதை எப்டி உருப்படியா சொல்றதுனுதான் தெரியல‌…”

” ”

ச‌ட்டுனு அவ‌ கைய‌ புடிச்சுகிட்டேன்.

அவ‌ அமைதியா என்னைப்பாக்க‌, ப‌ய‌ங்க‌ற‌ ஃபீலிங்க்ஸோட‌….

”என‌க்கு உன்னை ரொம்ப‌ புடிச்சுருக்கு… உன் கைய புடிச்சுருக்குற‌ப்போ,என‌க்கு எவ்வ‌ள‌வு ச‌ந்தோச‌மா இருக்கு தெரியுமா??… இந்த‌ கைய‌, நான் புடிச்சுட்டே இருக்க‌ணும் போல‌ இருக்கு…”

“இப்டி புடிச்சுகிட்டே இருந்தா.. நான் எப்டி’டா சாப்டுற‌து???….”

“ச்சே!!!! என் ஃபீலிங்க்ஸை நீ புரிஞ்சிக்க‌வே மாட்டியா???”

“ச‌ரி விடுடா… உன் கண்ணுல ஃபீலிங்க்ஸ் இருக்குறத நான் எப்பயோ பாத்துட்டேன். நான் தான் ஓகே சொல்லிட்டேன்’ல அப்ற‌ம் என்ன‌???…”

” என் கண்ணுல ஃபீலிங்க்ஸ் தெரிஞ்சுதா??? சாரி டார்லிங்… கொஞ்சம் ஓவர் ஆக்ட் பண்ணிட்டேன்…”

” இதுதான்டா… உங்கிட்டே எனக்கு புடிச்சது…”

“ஓ!!!… சூப்ப‌ர்டா… எங்கூட‌ எங்க‌யாவ‌து அவுட்டிங் வ‌ர்ரியா??…”

“ஆர‌ம்பிச்சுட்டியா??? என‌க்கு தெரியும். நீ இந்த‌ மாதிரி, எட‌க்கு ம‌ட‌க்கா எதாவ‌து கேப்பேனு…”

“இல்லை… இல்லை… எங்க‌யாவ‌து போவோம்… எட‌ம் நீயே சொல்லு…”

“அதெல்லாம் முடியாது…”

“ஹேய்.. ப்ளீஸ்… ப்ளீஸ்… ப்ளீஸ்…”

“ச‌ரி. ஆனா, சாய‌ங்கால‌த்துக்குள்ள‌ திரும்பிட‌ணும். சிட்டிய‌ விட்டு ரொம்ப‌ தூர‌ம்’னா வ‌ர‌ மாட்டேன்…”

“சிட்டிக்குள்ள‌, அதுவும் சாய‌ங்கால‌த்துக்குள்ள‌, அப்டி ஒரு எட‌ம் எங்க‌ன‌க்குள்ள‌ இருக்கு???…”

“அது நீதான் சொல்ல‌ணும்… நீ சொல்ற‌ எட‌த்த‌ பொறுத்துத்தான்… நான் வ‌ர்ர‌தா, வேணாமானு முடிவு எடுக்க‌ணும்….”

” ம்ம்ம்… ச‌ரி… காலை’ல‌, புளிசாத‌த்த‌ கிண்டிக்கிட்டு, க‌ண்ண‌மாபேட்டை சுடுகாட்டுக்கு போவோம்… அங்க‌ எதாவ‌து ந‌ல்ல‌ ச‌மாதி’ல‌ உக்காந்து சாப்டுட்டு, கொஞ்ச‌ நேர‌ம் சீட்டாடுவோம்… அப்பால‌, அங்க‌ வ‌ர்ர‌ எதுனா, பொண‌த்த‌ எரிச்சு, ‘காம்ப் ஃபைய‌ர்’ வெளையாடுவோம்… ப‌ய‌ங்க‌ர‌ த்ரில்லிங்கா இருக்கும் என்ன‌ சொல்றே??…”

“போடா பொறுக்கி ராஸ்கல் !!!…. ”

NarayanaMoorthy.K said...

Part -1
“இதய‌த்தின் வலியை…

இறகு கொண்டு வருடும்,

ந‌ண்ப‌னின் ஆறுதலான,

கைத்தழுவல்”

எப்ப‌வாவ‌து , ஏதாவ‌து அடிப‌ட்டோ, இல்ல‌ நோய்வாய்ப்ப‌ட்டோ ஹாஸ்பிட‌ல்’ல‌ அட்மிட் ஆகியிருக்கீங்க‌ளா??இல்ல அடிபட்டு ஆஸ்பத்திரியில இருக்கிற நண்பனை பாக்க போயிருக்கீங்களா ???

நானும் ரெண்டு மூணுத‌ட‌வை (!!!) இப்ப‌டி ஹாஸ்பிட‌ல்’ல‌ அட்மிட் ஆகி அவ‌ஸ்தை பட்டுருக்கேன். அத‌னாலேதான் இதை ஒரு வாழ்க்கைப்பாடமா/தத்துவமா உங்க‌கிட்டே சொல்ல‌லாம்’னு நினைக்கிறேன்.

அந்த‌ நேர‌த்துல‌ ,உங்க‌ள‌ பாக்க‌ வ‌ர்ர‌வ‌ங்க‌ளோட‌ ம‌ன‌நிலையும், உங்க‌ளோட‌ ம‌ன‌நிலையும் எப்டி இருக்கும்???

ஏதோ எழ‌வு வீட்டுக்கு வ‌ந்த‌ மாதிரி சோக‌மா மொக‌த்த‌ வ‌ச்சுகிட்டு,

”எப்டிடா இருக்கே…”

”வ‌லி எப்டி இருக்கு…”

”மாத்திரை எல்லாம் ஒழுங்கா சாப்டுடா..”

’னு ஒரே மாதிரியா எல்லா பேரும் அதையே சொல்லி, வ‌லி கொறைஞ்சு இருந்தாலும் , மறுப‌டியும் ஞாப‌க‌ப்ப‌டுத்தி, நெச‌மாவே நோயாளி மாதிரி ஃபீல் ப‌ண்ண‌ வ‌ச்சுடுவாங்க‌…

அந்த‌ நேர‌த்துல‌, அவ‌ங்க‌ளுக்கு வேண்டிய‌து, வ‌லியை நினைவு ப‌டுத்தும் வார்த்தைக‌ள‌ல்ல‌… வ‌லியை ம‌ற‌க்க‌ச்செய்யும் வ‌ருடல்க‌‌ள்

நானும் நோயாளியா [அட‌ …நோயாளி மாதிரி] இருந்ததால‌, அப்டி ஃபீல் ப‌ண்ணியிருக்கேன்…

வ‌ர்ர‌வ‌ன் எல்லாம் கைஆட்டிகிட்டு வ‌ந்துட்டு,

”என்ன‌ மாப்ளே !!! இப்டி ஆகிப்போச்சேடா” ‘னு ஒரே ஃபீலிங்க்ஸ் விடுவாங்க‌ பாருங்க‌..

”டேய் வ‌ந்த‌து வ‌ந்தீங்க‌ … ஒரு அரைக்கிலோ ஹார்லிக்ஸ் , ஒரு கிலோ ஆப்பிள் வாங்கிட்டு வ‌ந்துருக்க‌லாம்’ல‌….”

”உன‌க்கு அடி ப‌ட்டு, ஆஸ்ப‌த்திரி’ல‌ இருக்கே’னு சொன்ன‌ உட‌னே, அதிர்ச்சியாகி வ‌ர்ர‌ப்போ ம‌ற‌ந்துட்டேன்டா…”

”ஆமா , அதிர்ச்சி ஆயி , ஒரு வார‌ம் க‌ழிச்சு தானே , வ‌ந்து பாக்குறே…”

”என்ன‌டா நீ, புரிஞ்சுக்க‌ மாட்டியாடா…”

இந்த மாதிரிதான் ந‌ட‌க்கும்….

அதுல‌ இருந்து, என் ந‌ண்ப‌ர்களுக்கு [அப்டினு இல்ல யாராக இருந்தாலும்] நான் அவங்களோட வலி மறக்க, எதையாவது சொல்லுவேன்… நான் பேசுறப்போ, அவங்களும் தனக்கு இருக்கிற வலியை மறந்துடுவாங்க…

ஒருவாட்டி இப்டித்தான், என் நண்பனுக்கு தலையில அடிபட்டு, கட்டு போட்டு வீட்ல இருந்தான்…அவ‌ன‌ பாக்க‌ நானும் என்னோட‌ இன்னொருத்த‌னும் போயிருந்தோம்…

அனுப‌வ‌ப்ப‌ட்ட‌வ‌ன்’ங்க‌ற‌ முறையில‌ நான் ப‌ழ‌ம் எல்லாம் வாங்கிட்டு போயி குடுத்தேன்…

அவ‌னையும் கிட்ட‌த்த‌ட்ட‌ எல்லா பேரும் வ‌ந்து, குச‌ல‌ம் விசாரிச்சு ப‌டுத்தி இருந்தாங்க‌…

”மாமா …. தலையில‌ ப‌ரிவ‌ட்ட‌ம் சூப்ப‌ரா இருக்குடோய்…!!!!”

”ஏண்…டா.. நீ வேற…”

”இல்ல‌ மாமா… இந்த‌ க‌ட்டோட‌ ஒரு சைட்’ல‌ இருந்து பாத்தா, பாபா ர‌சினி காந்து மாதிரி இருக்கேடா..”

”டேய் … சும்மா இருடா …”

[இன்னொரு ஃபிரண்ட்’அ காமிச்சு ]

”இவ‌ன‌ யாரு’னு தெரியுதாடா ???…”

”இதெல்லாம் ரொம்ப‌ ஓவ‌ர்’டா…”

“ஏ… சொல்லுடா … தெரியுதா ???”

”போடா… வெண்ணே!!!”

”ஏண்டா … கோவுச்சுக்கிறே…. த‌லையில‌ அடிப‌ட்டுருக்கு … மூளை கீளை கொழ‌ம்பிடுச்சோ’னு ஒரு ட‌வுட்… அதான் செக் ப‌ண்ணேன்…”

நான் அங்க‌ இருந்து கெள‌ம்புற‌ வ‌ரைக்கும், அவ‌னுக்கு அடிப‌ட்டுருக்குங்க‌ற‌ ஃபீலிங்க்ஸ் வ‌ந்துடாமே, பாத்துகிட்டேன்… நெச‌த்துல‌ அவ‌ங்க‌ளும் அத‌ தான் எதிர்பாப்பாங்க‌…[இது அந்த நண்பன், நான் கெளம்புறப்போ சொன்னது]

இதே ஏதாவது ஒரு ஹார்ட் ஆபரேசன் நடந்துட்டா போதும்… அவங்கள எக்ஸ்ட்ரா கேர் எடுத்துக்கச்சொல்லி, ஏதோ ஒரு ஜந்து மாதிரி ஆக்கிடுவாங்க…

சில‌ நேர‌ங்க‌ளில் , அந்த‌ நினைப்பே அவ‌ங்க‌ளை ரொம்ப‌ ம‌ன‌ உளைச்ச‌லுக்கு ஆளாக்கி, கிட்ட‌தட்ட‌ நிஜ‌மாவே தான் ஒரு நோயாளி’ங்க‌ற‌ பிர‌மைக்கு போயிடுவாங்க‌…

த‌லைவ‌லியும் வ‌யித்த‌ வ‌லியும் த‌ன‌க்கு வ‌ந்தாதான் தெரியும்’னு ட‌ய‌லாக் அடிக்கிறீங்க‌ளா???அப்ப‌ இதை கேளுங்க‌,

NarayanaMoorthy K said...

Part - 2

ஒருத‌ட‌வை என‌க்கு சின்னதா ஒரு ஆப‌ரேஷ‌ன் ப‌ண்ண‌னும்’னு சொல்லிட்டாங்க‌…

ஆப‌ரேஷ‌ன்’னா, வ‌யித்த‌ கிழிச்சு எல்லா ஸ்பேர் பார்ட்ஸ்’யும் க‌ழ‌ட்டி, ஓவ‌ர் ஆயிலிங் ப‌ண்ற‌ மாதிரி, எல்லாம் க‌ற்ப‌னை ப‌ண்ணாதீங்க‌… சும்மா …. நீள‌மா ஒரு ஊசி’ய‌ சொருகி, அந்த‌ லிக்யூட்’ உறிஞ்சி எடுத்துட்டாங்க‌ அப்புறம் கொஞ்சம் stiches …

இந்த‌ நியூஸ் என் ப‌ழைய‌ ஆபிஸ் ஃபுல்லா ப‌ர‌வி,,

ஆளாலுக்கு போன் மேலே போன் போட்டு ஒரே இம்சை …

என‌க்கு வ‌ந்த‌ எரிச்ச‌ல‌, எங்க‌ போயி சொல்லுவேன்…

இதுல‌ என் கொலீக் [பொண்ணு Kr]வந்து, ப‌ய‌ங்க‌ர‌ ஃபீலிங்க்ஸோட‌,

”ஆப‌ரேஷ‌ன் ப‌ண்ணாங்க‌லாம், இப்ப‌ எப்டி இருக்கு..??”

”ப‌ர‌வாயில்ல இருக்கு…”

”வ‌லிக்குதா???”

”இல்ல… சொக‌மா இருக்கு…”

”ஏய் !!!… சரி …ஆப‌ரேஷ‌ன் ப‌ண்ற‌ப்போ எப்டி இருந்துச்சு’னு சொல்லு …”

”அய்யோ … ப‌ட‌த்துல‌ பாப்போம்’ல‌ அதே மாதிரி ஆப‌ரேச‌ன் தியேட்ட‌ர்’ல”

”ஓஓஓஓ…”

”என் வ‌யித்துல‌ ஒரு ஆறு இன்ச்’க்கு கிழிச்சு …”

”அய்யோ… அப்ப‌ற‌ம் . அனெஸ்தீசியா குடுத்தாங்க‌ளா ??”

”ஆமா … ஆனா ஆப‌ரேச‌ன் ந‌ட‌க்குற‌ப்போ பாதி’யில‌ என‌க்கு முழிப்பு வ‌ந்துடுச்சு…”

”அய்ய‌ய்யோ…. அப்ப‌ற‌ம்..”

”டாக்டர் ஆப‌ரேச‌ன் ப‌ண்ணிகிட்டு இருந்தாரு… நான் அப்டியே எந்திருச்சு ….

டாக்டர் கிட்டே , டாக்ட‌ர் … இதுல‌ என் கிட்னி எது’னு காமிங்க‌ளேன்’னேன்… அவ‌ரு கிட்னி’ய‌ காமிக்காம‌ கீழே கெட‌ந்த‌ க‌ட்டை கொண்டு என் த‌லை’யில‌ அடிச்சுட்டாரு… அப்ப‌ற‌ம் என்ன‌ ஆச்சு’னு தெரிய‌ல‌. நான் ம‌ய‌ங்கிட்டேன்”

அந்த‌ பொண்ணோட‌ மூஞ்சிய‌ப்பாக்க‌ணுமே….

”டாக்டர், க‌ரெக்ட்’ஆதான் ப‌ண்ணியிருக்காரு…!!!உன் வாய‌யும் சேர்த்து தைச்சு விட்டுருக்க‌லாம்…”

இதுல என்ன ஒரு பிளஸ் பாயிண்ட் னா, ஆபரேஷன் முடிஞ்ச பின்னாடி, டாக்டர் சரியா எல்லா stiches யும் remove பண்ணாம விட்டுட்டார்... அத பத்தி அடுத்த கமெண்ட்ஸ் ல சொல்லுறேன்....