தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?
நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் - அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும்
மூளா தழிந்திடுதல் வேண்டும் - இனி
என்னைப் புதியவுயி ராக்கி - எனக்
கேதுங் கவலையறச் செய்து - மதி
தன்னை மிகத்தெளிவு செய்து - என்றும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்.
- பாரதியார்
Monday, July 19, 2010
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
திருக்குறளுக்கு யார் யாரோ தெளிவுரை எழுதிருக்காங்க..
ஆனா பாருங்க அதெல்லாம் திருக்குறள விட குழப்புது..
நேத்து MTC bus ல போகும்போது ஒரு குறளைப் படிச்சேன்..
அப்போதான் தமிழ்கிறுக்கனான எனக்கு இந்த சந்ததிகளுக்கு
ஏத்தது போல தெளிவா விளக்கம் எழுதலாமேன்னு தோனிச்சு..
விதி யார விட்டது..
இதையும் நீங்க படிச்சுதானே ஆகணும்..
பின்குறிப்பு:பாப்பையா sir, தயவுசெஞ்சு என்ன மன்னிச்சுடுங்க..
நாம start பண்ணலாமா..
ஐயோ ஓடாதீங்க..
நான் இன்னும் மொக்கையே ஆரம்பிக்கல
Ok
Voice 1:(He.. He.. குறள் ௧ (தமிழ்ல க என்றால் ஒன்று) .. )
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று.
நம்ம Explanation:
Wifekkita மானே தேனேன்னு தாஜா பண்ணமா, ஓவரா சவுண்ட்
விட்டீனா, மகனே வீட்ட சாத்திகிட்டு உனக்கு ஊமைகுத்தா விடுவானு வள்ளுவர் சொல்லிருக்காரு..
(சத்தியமா நான் சொல்லல)
Voice 2:
யான் நோக்குங்கால் நிலம்நோக்கும் நோக்காக்கால்
தான் நோக்கி மெல்ல நகரும்.
நம்ம Explanation:
இதுதாங்க 2000 வருஷத்துக்கு முன்னாடியே வள்ளுவர் நம்ம தமிழ் பொண்ணுங்கள பத்தி
சொல்லிருக்க குறள்.நாம look விடும்போது என்னமோ நிமிர்ந்தே பாக்காத பொண்ணுங்க போல
over ah scene போட்டு கிட்டு தரையே பார்ப்பாங்க.நாம look விடுறத நிறுத்திட்டு வேற பக்கம் பார்த்தா அவளுங்க நாம பார்க்காதத தெரிஞ்சுகிட்டு நம்மள பார்த்து விடுவாளுங்க பாருங்க looku.Sightna sightu அப்படி ஒரு sight.இதையும் நான் சொல்லலேங்க வள்ளுவர்தான்.
Voice 3:
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
நம்ம Explanation:
என்னதான் நம்ம close friend ஒரு பொண்ண பத்தி நம்மகிட்ட build up விட்டாலும்
நாம நேர்ல போய் கிட்ட நின்னு பார்த்துதான் அது superb figurea இல்ல சுமாரான sappa figurea nu முடிவு பண்ணனும்.
புதுப்புது அர்த்தங்கள் படத்தில் வரும் “கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே… என் பாட்டைக்கேளு உண்மைகள் சொல்வேன்” இந்த மெட்டில் டைட்டில் பாட்டு எழுதியுள்ளேன். பாடிப் பார்க்கவும்.
உறவாகும் நட்பே
உயிரோடு வா…வா…
உன் நெஞ்சில்
இதற்கும் இடமொன்று தா..தா..
இமையோடு விழிப்போலவே
இணையாகும்
துணையாகும்
தொடரும் வெள்ளியே...
உறவாகும் நட்பே
உயிரோடு வா…வா…
உன் நெஞ்சில்
இதற்கும் இடமொன்று தா..தா..
வாலிபத்தில் இனிக்கும்
வயதாக கசக்கும்
ஆனாலும்
உறவு மாறாதது.
உறவைவிட இனிக்கும்
உயிரைவிட துணியும்
ஆனாலும்
நட்பு அழியாதது...
அன்பான தோழி
பண்பான தோழி
அமைந்தாலே பேரின்பமே....
Post a Comment